Home Blogs காரிருளில் நம் தீபம் இயேசு

காரிருளில் நம் தீபம் இயேசு

356
0

ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய.. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன், வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்; ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்.. என்ற பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம்.

1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.

அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம். காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார.(சங்கீதம் 18:28)

இந்த நாட்களிலும் கொரோனோ என்கிற பயங்கரமான ஒரு எதிரியை மேற்கொள்ள முடியாமல் இந்தியா மிகவும் தவிக்கிறது. இந்த இரண்டாவது அலை இந்தியாவை அப்படியே திருப்பிப் போட்டு விட்டது. மனிதன் சுவாசிக்கும் பிராண வாயு இல்லாமல் அல்லது ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நாளில் 26 பேர் மரித்திருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் நமக்கு வெளிச்சத்தை கொடுப்பவர் நம் இயேசு மாத்திரமே. அவரை நாம் சார்ந்து கொள்ளும்போதுநம்மை சுற்றி இருள் இருந்தாலும் எல்லாம் வெளிச்சமாகும்..

கர்த்தரின் பாதுகாப்பு நம்மையும் நம்முடைய அன்பு உறவுகளையும் சுற்றி சூழ்ந்து பாதுகாத்துக் கொள்ளும். விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைவேன் என்று நாம் அவரையே சார்ந்து கொள்வோம். இந்த நிலைமையும் கடந்து போகும் ஆமென் அல்லேலூயா!